< Back
மாநில செய்திகள்
போலி சான்றிதழ் வழங்க உடந்தையாக இருந்த  2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம்
தர்மபுரி
மாநில செய்திகள்

போலி சான்றிதழ் வழங்க உடந்தையாக இருந்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம்

தினத்தந்தி
|
4 Oct 2022 12:15 AM IST

போலி சான்றிதழ் வழங்க உடந்தையாக இருந்த 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கொலசனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58). விவசாயி. இவர் தனது விவசாய நிலத்திற்கு இலவச மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார். பல ஆண்டுகள் ஆகியும் அவருக்கு மின்இணைப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் தான் இறந்தது போல் போலி சான்றிதழ் தயாரித்து வேறு ஒருவருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதாகவும் இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ், வெங்கடேசன் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகளிடம் சுப்பிரமணி புகார் அளித்தார்.

இந்த நிலையில் தர்மபுரியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அப்போது கலெக்டர் சாந்தி கூறுகையில், புகார் தொடர்பான விசாரணை அடிப்படையில் புகாருக்குள்ளான 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் செய்திகள்