< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரியில்ஆதிதிராவிட நலக்கல்லூரி மாணவர் விடுதி வார்டன் பணி இடைநீக்கம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கிருஷ்ணகிரியில்ஆதிதிராவிட நலக்கல்லூரி மாணவர் விடுதி வார்டன் பணி இடைநீக்கம்

தினத்தந்தி
|
25 Sept 2023 1:00 AM IST

கிருஷ்ணகிரி:

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு கிருஷ்ணகிரி அரசு ஆதிதிராவிட நலக்கல்லூரி மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களின் வருகை பதிவேடு, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள், இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள், கோப்புகளை அமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பல்வேறு குளறுபடிகள் இருந்த காரணத்தால் ஆதிதிராவிட நலக்கல்லூரி மாணவர் விடுதி வார்டன் முருகன் என்பவரை பணி இடைநீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்