< Back
மாநில செய்திகள்
வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்கூட்டம்
கரூர்
மாநில செய்திகள்

வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்கூட்டம்

தினத்தந்தி
|
27 Oct 2023 12:08 AM IST

வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

புகழூர் நகர தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான ஆய்வுக் கூட்டம் வேலாயுதம்பாளையத்தில் நடைபெற்றது. இதற்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மீனா ஜெயக்குமார் கலந்துகொண்டு வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

வாக்குச்சாவடி வார்டு வாரியாக சரிபார்க்கப்பட்ட பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஆற்ற வேண்டிய பணிகள், தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்களின் பயன்களை மக்களுக்கு கொண்டு செல்வது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது. புகழூர் நகராட்சி பகுதியில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகளை தி.மு.க.விற்கு பெற்றுத்தருவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், புகழூர் நகர்மன்ற துணைத்தலைவர் பிரதாபன், நகர் மன்ற உறுப்பினர்கள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்