< Back
மாநில செய்திகள்
தேசிய மாணவர் படை அதிகாரிகள் ஆய்வு
மதுரை
மாநில செய்திகள்

தேசிய மாணவர் படை அதிகாரிகள் ஆய்வு

தினத்தந்தி
|
24 March 2023 1:43 AM IST

திருநகர் பள்ளியில் தேசிய மாணவர் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருநகரில் உள்ள அரசு உதவி பெறும் முத்துத்தேவர், முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படைசெயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று கர்னல் சி.எஸ்.சோலங்கி, சுபேதார் எஸ்.குமார், ஹவில்தார்ஜி.கோவிந்தராஜ் ஆகியோர் தேசிய மாணவர் படையின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் மாணவர்களிடம் தேசிய மாணவர் படை செயல்பாடுகள் குறித்து கருத்துகள் கேட்டதோடு அதில் மாணவர்களின்முக்கிய பங்கின் அவசியம் குறித்து பேசினார்கள். இந்த ஆய்வில் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஆனந்த், தேசிய மாணவர் படை ஆசிரியர் முகமதுகவுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்