< Back
மாநில செய்திகள்
நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி
அரியலூர்
மாநில செய்திகள்

நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி

தினத்தந்தி
|
6 March 2023 6:07 PM GMT

நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

தமிழக வனத்துறையின் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக ஜனவரி மாதம் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த மாதம் நில வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் வங்காரம், குழுமூர், ஆண்டிமடம், செதலவாடி, ஜெயங்கொண்டம், அரியலூர் நகரம், சுத்தமல்லி, தட்டாஞ்சாவடி, வேட்டக்குடி, கோவிலூர், பாட்ஷா காலனி உள்ளிட்ட 20 இடங்களில் அரியலூர் மாவட்ட வனத்துறையின் மூலம் நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது. இதில் தேன்சிட்டு, தூக்கணாங்குருவி, வால் காக்கை, ஆந்தை, நீலவால் பஞ்சுருட்டான், மரங்கொத்தி கிருஷ்ண பருந்து, வெண் கண் வைரி, மாங்குயில், தேன் பருந்து உள்ளிட்ட பறவைகள் காணப்பட்டது. அரியலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு மாணவர்கள் மற்றும் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், வன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்