< Back
மாநில செய்திகள்
வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு
கரூர்
மாநில செய்திகள்

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

தினத்தந்தி
|
18 Nov 2022 12:00 AM IST

வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகனூர், கீழவெளியூர், தோகைமலை ஆகிய ஊராட்சி பகுதிகளில் நேற்று ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முதலில் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகனூர் ஊராட்சியில் 15-வது நிதி குழு திட்டத்தின் கீழ் முடிவுற்ற கழிவுநீர் வடிகால் கால்வாய்களையும், சுகாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தனிநபர் உறிஞ்சி குழியும், செவ்வக வடிவ உறிஞ்சிக்குழி அமைக்கும் பணிகளையும், ஒன்றிய பொது நிதியிலிருந்து முடிவுற்ற ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து தோகைமலை ஊராட்சியில் சுகாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிப்பு கூடத்தையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தனிநபர் விவசாய பாசன கிணறு அமைக்கும் பணிகளையும், கீழவெளியூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்