< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: நேரு விளையாட்டு அரங்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
|9 Jan 2024 6:28 PM IST
போட்டிக்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது
சென்னை,
6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி வரும் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் மொத்தம் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்குட்பட்ட பிரிவில் சுமார் 5,500-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த போட்டிக்காக தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியம் முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக சென்னை நேரு விளையாட்டு மைதானம் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்காக பிரத்யேகமாக தயாராகும் நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.