< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு
|7 Nov 2022 12:54 AM IST
அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை தோட்டக்கலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலில் அவர் கீழப்பழுவூர் அரசு தோட்டக்கலை பண்ணையினை ஆய்வு செய்தார். பின்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் காவனூர் கிராம குழுக்களை ஆய்வு செய்து விவசாயிகளை சந்தித்து பேசினார். தொடர்ந்து தோட்டக்கலை துறை அலுவலர்களுடான நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.