< Back
மாநில செய்திகள்
குன்னம் பகுதியில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

குன்னம் பகுதியில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு

தினத்தந்தி
|
8 Sept 2022 11:56 PM IST

குன்னம் பகுதியில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வட்டாரம் சிறுமத்தூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தரிசு நிலம் உருவாக்கப்பட்டு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பினை வேளாண்மை கூடுதல் இயக்குனரும், ஸ்டாமின் இயக்குனருமான சங்கரலிங்கம் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து பசுமை போர்வை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தேக்கு மர கன்றுகள் நடப்பட்ட வயல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தென்னங்கன்றுகள் நடப்பட்ட வயல்களையும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் கீதா வேப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலர் அமிர்தவல்லி, வேளாண்மை உதவி அலுவலர் சதாசிவம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்