< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
|2 Oct 2023 1:00 AM IST
மருந்து கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று கலெக்டர் பூங்கோடி உத்தரவிட்டார்.
மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம், விதிகளின்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அதை தொடர்ந்து மருந்து கட்டுப்பாட்டு அலுவலர், மருந்து ஆய்வாளர் ஆகியோர் மருந்து கடைகளை ஆய்வு செய்வார்கள்.
அந்த ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாத மருந்து கடைகளின் உரிமையாளர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பூங்கொடி தெரிவித்து உள்ளார்.