< Back
மாநில செய்திகள்
கண்காணிப்பு கேமரா பழுது நீக்குதல் பயிற்சி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கண்காணிப்பு கேமரா பழுது நீக்குதல் பயிற்சி

தினத்தந்தி
|
7 March 2023 6:54 PM GMT

நாகையில் கண்காணிப்பு கேமரா பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி நாளை (வியாழக்கிழமை) முதல் 15 நாட்கள் நடக்கிறது.


நாகையில் கண்காணிப்பு கேமரா பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி நாளை (வியாழக்கிழமை) முதல் 15 நாட்கள் நடக்கிறது.

இலவச பயிற்சி

நாகை மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஊரக பகுதிகளில் சுய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, ஊக்கப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நாகை மாவட்ட ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் கடந்த 2011- ம் ஆண்டு முதல் தையல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், ஊறுகாய் தயாரித்தல், செல்போன் சர்வீஸ் பயிற்சி உள்ளிட்ட 303 பிரிவுகளில் இலவச பயிற்சிகள் அளித்து வருகிறது.

15 நாட்கள் நடக்கிறது

இதன்மூலம் இதுவரை பயிற்சி பெற்ற சுமார் 8,094 பேர்களில், 6052 பேர் சுயதொழில் தொடங்கி செய்து வருகின்றனர். பயிற்சியின் போது இலவச உணவு, பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நாளை (வியாழக்கிழமை) முதல் 23- ந்தேதி வரை 15 நாட்கள் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் குறித்த இலவச பயிற்சி நாகை ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது.காலை 9.30 மணியிலில் இருந்து மாலை 5.30 மணி வரை நடக்கும் இந்த பயிற்சியில் 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்கள் பங்கேற்கலாம். மதிய உணவு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 8870940443, 9047710810 என்ற நாகை ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்