< Back
மாநில செய்திகள்
திறந்து விடப்பட்ட உபரிநீர்...வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் - போராட்டத்தில் குதித்த மக்கள்
மாநில செய்திகள்

திறந்து விடப்பட்ட உபரிநீர்...வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் - போராட்டத்தில் குதித்த மக்கள்

தினத்தந்தி
|
18 Oct 2022 11:48 PM IST

ஈரோட்டில் ஏரி நிரம்பி தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பூனாட்சி ஏரி நிரம்பி நிலையில், வீடுகளுக்குள் புகுந்தது. தண்ணீர் 50 க்கும் மேற்பட்ட வீடுகளில் சூழ்ந்தது. ஏரிகளில் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுவதால், துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் அவதியடைந்த மக்கள், முறையாக மழைநீர் வடிகால் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டி நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், ஒருமணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் போராட்டத்தை கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்