< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
சுரண்டையில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?
|22 Oct 2023 12:15 AM IST
சுரண்டையில் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு பகுதியில் மழலையர் பள்ளி எதிரில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் கால்நடைகள், நாய்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே சுற்றுச்சுவர் அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.