< Back
மாநில செய்திகள்
வள்ளலார் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
மாநில செய்திகள்

வள்ளலார் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

தினத்தந்தி
|
22 Jun 2023 9:35 AM IST

வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.

வடலூர்,

வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசியதாவது:-

"10 ஆயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்தவன், அப்போது வள்ளலாரின் நூல்களை படித்தபோது மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது.

எல்லா உயிர்களையும் நம்மில் ஒரு அங்கமாக பார்ப்பது தான் சனாதன தர்மம். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் வெளிப்பாடு" என்று கூறினார்.

மேலும் செய்திகள்