< Back
மாநில செய்திகள்
இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்ற ஆதரவா? எதிர்ப்பா?பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி
மாநில செய்திகள்

இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்ற ஆதரவா? எதிர்ப்பா?பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

தினத்தந்தி
|
2 May 2024 8:44 AM IST

வழக்கம்போல் திசை திருப்பாமல், காங்கிரஸ் மீது அவதூறு கூறாமல் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த 1949-ம் ஆண்டு அரசியல் சட்ட வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்போதிருந்து பா.ஜனதாவின் சித்தாந்த முன்னோடிகள், அரசியல் சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள். அதனால், அரசியல் சட்டத்தை மாற்ற பா.ஜனதா விரும்புகிறது.

அதே சமயத்தில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைைய திரித்துக் கூறி, அதற்கு பிரதமர் மோடி மதச்சாயம் பூசி வருகிறார். மத அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி கூறவில்லை. தேர்தல் அறிக்கையில் எந்த இடத்தில் அப்படி சொல்லி இருக்கிறோம் என்று மோடி சொல்ல தயாரா?

எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான இடஒதுக்கீட்டின் 50 சதவீத உச்சவரம்பை நீக்க காங்கிரஸ் விரும்புகிறது. இடஒதுக்கீடு உச்சவரம்பை நீக்குவதையும், அதற்காக அரசியல் சட்ட திருத்தம் கொண்டுவருவதையும் பிரதமர் மோடி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? வழக்கம்போல் திசைதிருப்பாமல், திரிக்காமல், காங்கிரஸ் மீது அவதூறு கூறாமல் பிரதமர் மோடி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்