< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
மானிய விலையில் மூலிகை செடிகள் வழங்கல்
|20 Feb 2023 12:09 AM IST
மானிய விலையில் மூலிகை செடிகள் வழங்கப்பட்டன.
கரூர் வட்டாரத்தில் உள்ள வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு பயன்படும் வகையில் தோட்டக்கலை துறை சார்பாக 10 வகையான மூலிகை செடிகள், செடி வளர்ப்பு பைகள், தென்னை நார் கட்டிகள், மண்புழு உரம் மற்றும் தொழில்நுட்ப கையேடு அடங்கிய மூலிகைச் செடிகள் தொகுப்பானது பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு மூலிகை தொகுப்பின் விலையானது ரூ.1500 ஆகும். 50 சதவீத மானிய விலையில் ரூ.750-க்கு தோட்டக்கலை துறை மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கரூர் வட்டாரத்தில் மானிய விலையில் மூலிகை தோட்ட தொகுப்பு பெற ஆர்வம் உள்ளவர்கள் கரூர் வட்டார தோட்டக்கலைத்துறையை அணுகுமாறு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தமிழ் செல்வி, தோட்டக்கலை அலுவலர் செல்வகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.