திருவாரூர்
10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு தொடங்கியது
|திருவாரூர் மாவட்டத்தில் 10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு நேற்று தொடங்கியது.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்டத்தில் 10, 11-ம் வகுப்பு துணைத்தேர்வு நேற்று தொடங்கியது.
துணைத்தேர்வு
தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் 6-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இதைப்போல 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 11-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி நிறைவடைந்தது. இதற்காக தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத் தேர்வு நடைபெறுவது வழக்கம்.
தமிழ் தேர்வு
இதன்படி தமிழகம் முழுவதும் 10 மற்றும் 11-ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு மாவட்டம் முழுவதும் 5 மையங்களில் நடைபெற்றது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. இதைப்போல திருவாரூர் மாவட்டத்தில் 11-ம் வகுப்பு பொது தேர்வு 4 தேர்வு மையங்களில் நடந்தது.தேர்வுக்கு வந்தவர்களுக்கு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக உடல் வெப்பநிலை கண்டறியும் கருவி மூலம் வெப்பநிலை பரி சோதனை செய்யப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.