< Back
மாநில செய்திகள்
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளில் தொலைநோக்கு பார்வை இல்லை
சிவகங்கை
மாநில செய்திகள்

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளில் தொலைநோக்கு பார்வை இல்லை

தினத்தந்தி
|
10 Jun 2023 12:15 AM IST

மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளில் தொலைநோக்கு பார்வை இல்லை என கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டியளித்தார்

காரைக்குடி

சிவகங்கை எம்.பி. கார்த்திக் சிதம்பரம் காரைக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூட்டப்பட்டால் தென்னகம் பெருமளவு பாதிக்கப்படும். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளில் தொலைநோக்கு பார்வை கிடையாது. எனவேதான் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கே அதன் மீதான வரிச்சுமை அதிகரிக்கிறது. பா.ஜ.க. அரசுக்கு விலைவாசியை கட்டுப்படுத்த திறமையும் இல்லை, எண்ணமும் இல்லை. தமிழக மின்சாரத்துறைக்கு ரூ.1½ லட்சம் கோடி கடன் உள்ளது. கடனை குறைத்தால்தான் பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வர முடியும். புதிய பவர் பிளாண்ட்கள் அமைக்க வேண்டும். காற்றாலை மூலம் மின்சாரம், சூரிய ஒளி மூலம் மின்சார உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து அதன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். மின்வாரிய வருமானம் பெரும்பாலும் கடனுக்கான வட்டியாகவே செலவிடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர வாய்ப்புள்ளது என்றார். பேட்டியின் பொது முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புராம், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட செயலாளர் அப்பாவுராமசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்