< Back
மாநில செய்திகள்
பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல் கூடாது - திருமாவளவன்
மாநில செய்திகள்

பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல் கூடாது - திருமாவளவன்

தினத்தந்தி
|
8 Sept 2024 3:49 PM IST

நடிகர் விஜய்யின் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள் என திருமாவளவன் பேசியுள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"பள்ளிகளில் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல் இருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில்தான் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார். மூடநம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு மீதான நடவடிக்கை சரியானதே.

எல்லா அரசியல் கட்சிகளும் மாநாடு தொடங்கும்போது இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கம். நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெறும். அவரது மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள்." என்றார்.

மேலும் செய்திகள்