< Back
மாநில செய்திகள்
போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் திடீர் ஆய்வு
கடலூர்
மாநில செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் திடீர் ஆய்வு

தினத்தந்தி
|
10 July 2023 12:29 AM IST

கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் திடீரென ஆய்வு செய்தார்.

ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இரவு நேர ரோந்துப்பணியை தீவிரமாக மேற்கொள்ள போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இரவு நேர ரோந்துப்பணியை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சரியான முறையில் வேலை செய்கிறார்களா? என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தினமும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு திடீரென சென்று ஆய்வு செய்து வருகிறார். அதன்படி கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் 24 மணி நேரமும், அண்டை மாநிலமான புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி வருபவர்களை கண்காணித்து வருகின்றனர். இவர்கள் விழிப்போடு பணியாற்றுகிறார்களா? என்று நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் திடீரென சென்று ஆய்வு செய்தார்.

நடவடிக்கை

அப்போது அங்கிருந்த போலீசாரிடம், மது, சாராயம் கடத்தி வருவோரை தீவிரமாக கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டி வருவோர், அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வருவோர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். 24 மணி நேரமும் உஷாராகவும், பாதுகாப்பாகவும் இருந்து பணிகளை மேற்கொள்ளவும் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்