< Back
மாநில செய்திகள்
போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு
திருவாரூர்
மாநில செய்திகள்

போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு

தினத்தந்தி
|
25 Oct 2023 12:45 AM IST

முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

முத்துப்பேட்டை;

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வந்தார். போலீஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்ற அவர் கைதிகளை வைக்கும் அறைக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் போலீஸ் நிலையத்தில் இருந்த கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் பழைய வழக்குகளில் உள்ளவர்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். மேலும் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டார். அப்போது முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் இருந்தனர்.

மேலும் செய்திகள்