கடலூர்
பதக்கம் வென்ற போலீசாருக்கு சூப்பிரண்டு பாராட்டு
|மண்டல அளவிலான தடகள போட்டியில் பதக்கம் வென்ற போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையேயான 62-வது தடகள போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் வடக்கு மண்டல காவல்துறை சார்பில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் 100 மீ, 200 மீ ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பிடித்து தங்க பதக்கமும், நீளம் தாண்டுதலில் 3-வது இடமும் பிடித்து வெண்கல பதக்கமும் பெற்றார். கடலூர் ஆயுதப்படை ஏட்டு ஷாம் பிரகாஷ் 100 மீ, 200 மீ ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தையும், ஆயுதப்படை போலீஸ்காரர் சின்ராஜ் நீளம் தாண்டுதலில் (பொதுப்பிரிவு) 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றார். பதக்கம் வென்ற அவர்களை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டினார். அப்போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.