< Back
மாநில செய்திகள்
காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்டு பிரகாசித்த கருவறை
மாநில செய்திகள்

காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பட்டு பிரகாசித்த கருவறை

தினத்தந்தி
|
20 April 2023 11:01 PM IST

சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டு கருவறை பொன்னொளி வீசி பிரகாசித்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காரைக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பசுபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களின் இறுதியில், இந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெறும்.

அந்த வகையில் இன்றைய தினம் சூரிய உதயத்தின் போது சூரிய ஒளி லிங்கத்தின் மீது பட்டு கருவறை பொன்னொளி வீசி பிரகாசித்தது. இந்த காட்சியைக் காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.


மேலும் செய்திகள்