< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள்
|6 April 2023 3:10 PM IST
உத்திரமேரூர் துர்க்கை அம்மன் கோவில் மூலவர் மீது சூரிய ஒளி கதிர்கள் படும் நிகழ்ச்சி நடந்தது.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நவகிரகங்களின் தலைமை கிரகமான சூரிய பகவான் மூலவரான வடவாயிற் செல்வி என்கிற துர்க்கை அம்மனை வழிபடும் அரிய நிகழ்வு நடைபெறுவதாக கருதப்படுகிறது. இதையொட்டி துர்க்கையம்மன் மூலவர் மீது சூரிய ஒளிக்கதிர்கள் படும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவில் சார்பில் சிறப்பு ஆராதனை அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.