தூத்துக்குடி
விளாத்திகுளம் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி
|விளாத்திகுளம் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் களம் நிகழ்ச்சி நடக்கிறது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. நாளை (ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கிறார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணிக்கு எட்டயபுரத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மாபெரும் 'இரட்டை மாட்டு வண்டி' எல்கை பந்தயத்தை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து காலை 8 மணிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, எத்திலப்பநாயக்கன்பட்டியில் நடைபெறும் "மக்கள் களம்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். அதனை தொடர்ந்து விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் காலை 9.15 மணிக்கும், நீராவிபுதுப்பட்டி ஊராட்சியில் 9.45 மணிக்கும், ராமானூத்து ஊராட்சியில் 10.15 மணிக்கும் நடைபெறும் 'மக்கள் களம்" நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார். சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.