< Back
மாநில செய்திகள்
அமெரிக்காவுக்கான இந்திய தூதருடன் சுந்தர் பிச்சை சந்திப்பு
மாநில செய்திகள்

அமெரிக்காவுக்கான இந்திய தூதருடன் சுந்தர் பிச்சை சந்திப்பு

தினத்தந்தி
|
20 Sept 2022 7:43 PM IST

கூகுள் நிறுவனம் இந்தியாவை மிகவும் நேர்மறையான கட்டமைப்பில் பார்ப்பதாக சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முதல் முறையாக சென்றார். அங்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜித் சிங்கை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இந்திய தூதருடன், இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சுந்தர் பிச்சை ஆலோசனை நடத்தினார். மேலும் கூகுள் நிறுவனம் இந்தியாவை மிகவும் நேர்மறையான கட்டமைப்பில் பார்க்கிறது என்று சுந்தர் பிச்சை தெரிவித்தார்.

மேலும் செய்திகள்