< Back
மாநில செய்திகள்
கோடை விடுமுறை: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!
மாநில செய்திகள்

கோடை விடுமுறை: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!

தினத்தந்தி
|
14 May 2023 5:54 AM GMT

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.

நாகை,

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், கோடை விடுமுறையை கொண்டாட ஞாயிற்றுகிழமையான இன்றுநாகை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்துவரும் சிறப்பு திருப்பலியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். மேலும் வெளிநாட்டினரும் வருகை தந்துள்ளனர்.

இதனால் வேளாங்கண்ணி பேராலயம், கடைவீதி, கடற்கரை உள்ளிட்ட இடங்கள் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நிரம்பி உள்ளது. பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்