< Back
மாநில செய்திகள்
கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியீடு
மாநில செய்திகள்

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியீடு

தினத்தந்தி
|
21 April 2023 9:54 PM IST

கோடை விமுறைக்குப் பின் ஜூன் 19-ந்தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதியோடு தேர்வுகள் முடிவடையும் நிலையில், மே மாதம் முழுவதும் கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கும் தேதி குறித்த அறிவிப்பை கல்லூரி கல்வி இயக்குனர் கீதா வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த மாதத்தோடு தேர்வுகள் முடிந்த பிறகு மே 1-ந்தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் எனவும், அதனை தொடந்து ஜூன் 19-ந்தேதி கல்லூரிகள் மீண்டும் திறக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை, மொத்த வேலை நாட்களோடு கணக்கீடு செய்து அந்தந்த கல்லூரிகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்