< Back
மாநில செய்திகள்
மாணவ -மாணவிகளுக்கு கோடை விடுமுறை:ஈரோடு ரெயில் -பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
ஈரோடு
மாநில செய்திகள்

மாணவ -மாணவிகளுக்கு கோடை விடுமுறை:ஈரோடு ரெயில் -பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

தினத்தந்தி
|
1 May 2023 3:17 AM IST

மாணவ -மாணவிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஈரோடு ரெயில் -பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்களில் ஆண்டு இறுதித்தேர்வு முடிந்து மாணவ -மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஈரோட்டில் தங்கி படிக்கும் மாணவ -மாணவிகள் சொந்த ஊர் சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் ஈரோட்டை சேர்ந்த மாணவ -மாணவிகளும் உறவினர் வீடுகளுக்கு செல்கின்றனர்.

இதன் காரணமாக ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு சென்ற ரெயில் மற்றும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயிலில் முன்பதிவு அல்லாத பெட்டிகளில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணம் செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்