< Back
மாநில செய்திகள்
மதுரையில் கோடை மழை: சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி
மாநில செய்திகள்

மதுரையில் கோடை மழை: சாலையில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
11 May 2024 5:43 PM IST

மதுரையில் 2-வது நாளாக கோடை மழை பெய்து வருகிறது.

மதுரை,

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஒருசில மாவட்டங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. மதுரை, திருச்சி, தருமபுரி, ஈரோடு, விருதுநகர், குமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில், மதுரையில் 2-வது நாளாக கோடை மழை பெய்து வருகிறது. கோரிப்பாளையத்தில் உள்ள மேம்பாலத்திற்கு கீழ் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். அதேபோல, மதுரையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அங்கு குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்