< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டையை குளிர்வித்த கோடை மழை
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

புதுக்கோட்டையை குளிர்வித்த கோடை மழை

தினத்தந்தி
|
12 Jun 2023 11:26 PM IST

புதுக்கோட்டையை குளிர்வித்த கோடை மழை பெய்தது.

புதுக்கோட்டையில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அக்னி நட்சத்திரம் முடிந்த பின்பும் வெயில் உக்கிரம் குறையவில்லை. இடையிைடையே அவ்வப்போது ஓரிரு நாட்கள் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலையில் 5 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் பரவலாக பெய்தது. மேலும் இடி, மின்னல் பலமாக இருந்தது. இந்த கோடை மழையினால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ந்தது. மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்