< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் 65 மி.மீட்டர் மழைபதிவு
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் 65 மி.மீட்டர் மழைபதிவு

தினத்தந்தி
|
26 March 2023 12:15 AM IST

நாமக்கல்லில் நேற்று முன்தினமும் இரவு சில இடங்களில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. எனவே பொதுமக்கள் சாலையோர கடைகளில் விற்பனையாகும் தர்பூசணி, நீர்மோர் குடித்து தாகத்தை தீர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினமும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

இரவு சில இடங்களில் இடி-மின்னலுடன் கோடை மழை பெய்தது. குறிப்பாக நாமக்கல்லில் இரவு 9 மணி அளவில் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகள் மற்றும் பள்ளமான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழைஅளவு மி.மீட்டரில் வருமாறு :-

கலெக்டர் அலுவலகம்- 65, நாமக்கல் - 55, குமாரபாளையம்-30, மங்களபுரம் -18, எருமப்பட்டி-1, திருச்செங்கோடு-1. மாவட்டத்தின் மொத்த மழைஅளவு 170 மி.மீட்டர் ஆகும். இந்த மழையால் கோடை வெப்பத்தின் தாக்கம் நேற்று சற்று குறைந்து காணப்பட்டது.

மேலும் செய்திகள்