< Back
மாநில செய்திகள்
நெல்லையில் திடீர் கோடை மழை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் திடீர் கோடை மழை

தினத்தந்தி
|
20 March 2023 1:16 AM IST

நெல்லையில் நேற்று திடீர் கோடை மழை பெய்தது.

நெல்லையில் நேற்று திடீர் கோடை மழை பெய்தது.

கோடை மழை

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருகிறது.

நேற்றும் மதியம் வெயில் அதிகரித்து காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டமாக காட்சி அளித்தது. 4.30 மணி அளவில் திடீரென்று மழை பெய்தது. இந்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். திடீர் கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

மழை அளவு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்து 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

மணிமுத்தாறு -1, காக்காச்சி -5, நாலுமுக்கு -8, ஊத்து -10.

கருப்பாநதி -4, குண்டாறு -24, செங்கோட்டை -20, தென்காசி -3.

மேலும் செய்திகள்