கோடை விடுமுறை: கோவை - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்
|கோடை விடுமுறையையொட்டி கோவை - மங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கவும் கர்நாடக மாநிலம் மங்களூரு சென்டிரல் - கோவை இடையே வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மங்களூரு சென்டிரலில் இருந்து வரும் 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) அதேநாள் மாலை 5.25 மணிக்கு கோவை வந்தடையும்.
மறுமார்க்கமாக, கோவையிலிருந்து வரும் 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு மங்களூரு சென்டிரல் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (06042) மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.