< Back
மாநில செய்திகள்
கோடை விடுமுறை தொடக்கம் - வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

கோடை விடுமுறை தொடக்கம் - வால்பாறை கூழாங்கல் ஆற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
30 April 2023 10:39 PM IST

வால்பாறை பகுதியில் லேசான மழை பெய்த நிலையில், தற்போது கூழாங்கல் ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது.

கோவை,

கோவை மாவட்டத்தில் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள், அங்குள்ள கூழாங்கல் ஆற்றில் உற்சாகமாக குளித்துவிட்டுச் செல்கின்றனர். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பலரும் குளிர்ச்சியான கால சூழ்நிலை உள்ள பகுதிகளுக்கு சுற்றுலா மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் தற்போது 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்து மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அந்த வகையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வால்பாறை பகுதியில் லேசான மழை பெய்த நிலையில், தற்போது கூழாங்கல் ஆற்றில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது. இதனைக் கண்ட சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மக்கள் வருகை அதிகரித்துள்ளதால் போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்பது சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.



மேலும் செய்திகள்