< Back
மாநில செய்திகள்
கோடை விடுமுறை எதிரொலி: உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு
மாநில செய்திகள்

கோடை விடுமுறை எதிரொலி: உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் உயர்வு

தினத்தந்தி
|
15 April 2024 2:28 PM IST

கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர் பயணத்தின் நேரம் குறைவாக இருப்பதால் விமானத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆலந்தூர்,

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிமாநில மெட்ரோ பாலிடின் நகரங்கள் மற்றும் உள் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது .

பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து வருகின்ற மே மாதம் முழுவதும் கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவா, மும்பை, கொல்கட்டா மற்றும் மதுரை, தூத்துக்குடி உட்பட வெளி மாவட்டம் ,மாநிலங்களுக்கு செல்லும் விமானத்தின் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளது. சுற்றுலா மற்றும் சொந்த ஊருக்கு செல்வோர் பயணத்தின் நேரம் குறைவாக இருப்பதால் விமான பயணம் மேற்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் .

மேலும் அதற்கான முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி, முடிவடைந்த நிலையில் கடைசி நேரத்தில் செல்வோர் விமான டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால் விமானங்களில் போதிய இருக்கை இல்லாததாலும் டிக்கெட் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து போர்ட் பிளேயர் செல்ல ரூ 6,500- 10,200/- ,சென்னையில் இருந்து கோவா ரூ 4,500 - 5,200/-

சென்னையில் இருந்து மும்பை ரூ4,700 - 7,000 /- , சென்னையில் இருந்து ஜெய்ப்பூர் ரூ.10,200/-, சென்னையில் இருந்து ஸ்ரீநகர் ரூ12,000- 17,000/- கொல்கத்தாவுக்கு ரூ6,700- 9,000, கொச்சிக்கு ரூ 3,200-8,000/- சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ 5,000- 8,000/- சென்னையில் இருந்து தூத்துக்குடி ரூ 6,200- 8,000/- வரை விமான டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்