< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
உடையார்பாளையம் கிளை நூலகத்தில் கோடைகால முகாம்: வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
|19 May 2023 12:42 AM IST
உடையார்பாளையம் கிளை நூலகத்தில் கோடைகால முகாமில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் முழுநேர கிளை நூலகத்தில் கடந்த ஒருவாரமாக அரசின் உத்தரவு படி கோடைகால முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஓவியம், சதுரங்கம், கேரம், கணினி, மெய்நிகர் கருவிபயிற்சி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் இளங்கோவன் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், போட்டித்தேர்வுக்கு படிக்கும், மாணவ- மாணவிகளுக்கு எழுதுபொருள் பரிசாக வழங்கப்பட்டன. விழாவில் நூலக பள்ளி ஒருங்கிணைப்பாளர் தமிழாசிரியர் ராமலிங்கம், நூலகப்பணியாளர் நடராஜன், வாசகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் முருகானந்தம் வரவேற்றார். முடிவில் துணை நூலகர் மணிவண்ணன் நன்றி கூறினார்.