< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|23 Jun 2022 11:56 PM IST
வேப்பூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராமநத்தம்,
வேப்பூர் அடுத்த நகா் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்(வயது 30). இவர் தனது மனைவி தேவிகா(20) மற்றும் குழந்தையுடன் நல்லூரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வடிவேல், மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனை தேவிகா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த வடிவேல், வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாாின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.