< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
விழுப்புரம்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
13 Jun 2022 10:00 PM IST

திண்டிவனம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை காதலியை திருமணம் செய்து தர மறுத்ததால் விரக்தி

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள ஏந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தமலை மகன் விஜயகுமார்(வயது 25). கூலி தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலியின் பெற்றோரிடம் விஜயகுமார் பெண் கேட்டதாக தெரிகிறது. ஆனால் இவரது நடவடிக்கை சரியில்லாததால் காதலியை திருமணம் செய்து தர அவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த விஜயகுமார் அவரது வீட்டுக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்