< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
|13 Jun 2022 2:26 AM IST
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
செம்பட்டு:
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள குலாப்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் அன்புகுமரன்(வயது 24). பழனிச்சாமி புதிய வீடு கட்டி வருகிறார். நேற்று காலை அந்த வீட்டிற்கு பழனிச்சாமி வந்து பார்த்தபோது, வீட்டிற்குள் அன்புகுமரன் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார். இது பற்றி தகவல் அறிந்த ஏர்போர்ட் போலீசார் அங்கு வந்து அன்புகுமரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அன்புகுமரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.