நாகப்பட்டினம்
பிளேடால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலை முயற்சி
|நாகை அருகே பிளேடால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை அருகே பிளேடால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஏசுராஜ் மகன் சகாயராஜ் (வயது38). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அவரை குடும்பத்தினர் நாகை மாவட்டம் திருமருகல் அருகே நெய்குப்பை பகுதியில் உள்ள கோவிலுக்கு உறவினர் ஒருவருடன், மோட்டார் சைக்கிளில் அனுப்பி வைத்துள்ளனர்.
நெய்குப்பையில் கோவிலுக்கு செல்லும் வழியில் சகாயராஜ் ஒரு கடையில் குளிர்பானம் குடித்தார். பின்னர் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்று வருவதாக உறவினரிடம் கூறி சென்றார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
அங்கு சகாயராஜ் கையில் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்தார். இதனை கண்டு பதறிப்போன அக்கம் பக்கத்தினர் சகாயராஜை பிடித்து கைகளை கட்டி வைத்தனர்.
பின்னர் 108 ஆம்புலன்சில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சகாயராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிளேடால் கழுத்தை அறுத்து தொழிலாளி தற்கொலைக்கு முயன்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.