கடலூர்
திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி விருத்தாசலம் அருகே பரபரப்பு
|விருத்தாசலம் அருகே திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டின் முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் ஆலடி ரோட்டை சேர்ந்தவர் 21 வயது இளம் பெண். இவரும் தொரவலூர் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் அருள்ராஜ் (27) என்பவரும் காதலித்து வந்ததுள்ளனர். இந்நிலயில் அருள்ராஜ், தான் வெளிநாடு சென்று சம்பாதித்து வருகிறேன் அதுவரையில் எனக்காக காத்திரு என்று கூறி வெளிநாடு சென்றுவிட்டார். இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு அருள்ராஜ் சொந்த ஊருக்கு வந்தார். இதையடுத்து அவரிடம் சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு இளம் பெண் கேட்டார். ஆனால், அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை அருள்ராஜ் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகளை செய்துள்ளார்.
தற்கொலை முயற்சி
இதையடுத்து அந்த பெண், தனது காதலன் வீட்டுக்கு சென்று கேட்டார். இருப்பினும் அவர் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி அந்த பெண், கையில் வைத்திருந்த விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டார். இது பற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காதலித்து வந்ததும், அருள்ராஜ் திருமணம் செய்ய மறுத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.