சேலம்
2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டுதாய் தற்கொலை முயற்சி
|ஓமலூர் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றார். 6 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இன்னொரு சிறுவன் மீட்கப்பட்டான்.
ஓமலூர்
கணவன்- மனைவி தகராறு
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொட்டியபுரம் ஊராட்சி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி கவுசல்யா (வயது 25). இவர்களுக்கு ஸ்ரீரமேஷ் (10), தீபக்குமார் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று மாணிக்கம் கல் உடைக்கும் வேலைக்கு சென்று விட்டார். காலை 10 மணி அளவில் அங்குள்ள விவசாய கிணற்றில் 2 மகன்களை கிணற்றில் வீசிவிட்டு கவுசல்யாவும் குதித்தார்.
சிறுவன் சாவு
இதைக்கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். கிணற்றுக்குள் இறங்கி கவுசல்யா மீட்டனர். பின்னர் அவருடைய 2 குழந்தைகளையும் மீட்ட போது தீபக்குமார் தண்ணீரில் மூழ்கி பலியானார். ஸ்ரீரமேஷ் கிணற்றில் இருந்த குழாயை பிடித்துக் கொண்டதால் தப்பித்துக் கொண்டான். உடனே கவுசல்யா, அவருடைய மகன் ஸ்ரீரமேஷ் இருவரையும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இறந்து கிடந்த தீபக்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.