< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
கைதி தற்கொலை முயற்சி
|20 Oct 2023 12:15 AM IST
சேலம் சிறையில் உள்ள ஆயுள்தண்டனை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). ஆயுள் தண்டனை கைதியான இவர். சம்பவத்தன்று தனது சட்டையை கிழித்து கொண்டு அதை கயிறு போன்று அமைத்து உள்ளார். பின்னர் அதன் மூலம் அங்கு உள்ள கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பாதுகாப்பு பணியில் இருந்த சிறைக்காவலர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் விரைந்து செயல்பட்டு பழனிசாமியை மீட்டனர். கைதி தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சிறைத்துைற அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.