< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
இளம்பெண் தற்கொலை முயற்சி
|16 Oct 2023 1:55 AM IST
சேலத்தில் இளம்பெண் சாணி பவுடரை கரைத்து குடித்து தற்கொலை முயன்றார்.
அன்னதானப்பட்டி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி நித்யா (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகின்றன. குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி தகராறு இருந்து வந்தது. இதனால் நித்யா மன உளைச்சலில் இருந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சேலம் லைன்மேட்டில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் நித்யா சாணி பவுடரை கரைத்து குடித்து மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.