< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பென்னாகரம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் தற்கொலை
|3 July 2023 12:30 AM IST
பென்னாகரம்:
பென்னாகரம் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
நிதி நிறுவன ஊழியர்
பென்னாகரம் அருகே உள்ள சின்னபள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் புகழேந்தி (வயது 21). பி.காம் பட்டதாரி. இவர் ஆதனூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி புகழேந்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அவருடைய நண்பர் விஷ்ணு போன் மூலம் புகழேந்தியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
விசாரணை
பின்னர் புகழேந்தியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகழேந்தி இறந்தார். இதுதொடர்பாக முருகன் பென்னாகரம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.