தர்மபுரி
பென்னாகரம் அருகே இளம்பெண் சாணி பவுடர் குடித்து தற்கொலை
|பென்னாகரம்:
பென்னாகரம் அருகே இளம்பெண் சாணி பவுடரை கரைத்து தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவருடைய மனைவி மோனிஷா (வயது 24). இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அன்றில் இருந்து ேமானிஷா விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து மோனிஷா சாணி பவுடரை கரைத்து குடித்து விட்டு வீட்டின் அருகே வாந்தி எடுத்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மோனிஷாவை மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விசாரணை
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோனிஷா இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து மோனிஷா தாய் ஜோதி பென்னாகரம் போலீசில் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.