ஈரோடு
குழந்ைத இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
|குழந்ைத இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி தாளக்குட்டைபுதூரை சேர்ந்தவர் வீரபத்திரன். இவருடைய மனைவி கீர்த்தனா (வயது 24). இருவரும் கூலி தொழிலாளர்கள். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. அதனால் கீர்த்தனா மன வேதனையில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை திடீரென கீர்த்தனாவை காணவில்லை. அதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கிணற்றில் கீர்த்தனா பிணமாக மிதந்தார்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீர்த்தனாவின் உடலை மீட்டனர். பீன்னர் கீர்த்தனாவின் உடலை ஆப்பக்கூடல் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் கீர்த்தனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வீரபத்திரனுக்கும், கீர்த்தனாவுக்கும் திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் கோபி ஆர்.டி.ஓ.வும் இதுபற்றி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.