ஈரோடு
வீட்டு வேலை கற்றுக்கொள் என்று தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை
|வீட்டு வேலை கற்றுக்கொள் என்று தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
அந்தியூர்
வீட்டு வேலை கற்றுக்கொள் என்று தாய் கண்டித்ததால் 16 வயது சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
16 வயது சிறுமி
அந்தியூர் அருகே உள்ள மைக்ேகல்பாளையத்தை சேர்ந்தவர் சின்னப்பதாஸ். இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுடைய மகள் பிரதீபா (வயது 16). இவா் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு தர்மபுரியில் இருக்கும் தன்னுடைய பாட்டி வீட்டில் இருந்து வந்தார். கடந்த 3 மாதங்களாக மைக்கேல்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் இருந்தார்.
இந்தநிலையில் நேற்று பிரதீபாவிடம் சங்கீதா, நீ பெரிய பெண் ஆகிவிட்டாய். வீட்டு வேலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கண்டித்துள்ளார்.
விஷம் குடித்தார்
அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் வந்து பார்த்தபோது, பிரதீபா மயங்கிய நிைலயில் கிடந்தார். அவர் அருகே பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும் கிடந்துள்ளது. இதனால் மகள் விஷம் குடித்துவிட்டாள் என்று உணர்ந்துகொண்ட சங்கீதா உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரதீபா இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகளின் உடலை பார்த்து தாய் சங்கீதா கதறி அழுதது பார்ப்பவர்களையும் கண்கலங்க செய்தது.