< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
|5 Jun 2023 12:15 AM IST
பால் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
இளையான்குடி
இளையான்குடி அருகே உள்ள ரசூலா சமுத்திரத்தை சேர்ந்த மரியதாஸ் (வயது 60). பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி பாப்பா. மரியதாஸ் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மரியதாஸ் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு அப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.